Theme Check

அதிர்ச்சி! ரயிலில் ஒரு டீயின் விலை ரூ.20... சர்வீஸ் சார்ஜ் ரூ.50!!

அதிர்ச்சி! ரயிலில் ஒரு டீயின் விலை ரூ.20... சர்வீஸ் சார்ஜ் ரூ.50!!

அதிர்ச்சி! ரயிலில் ஒரு டீயின் விலை ரூ.20... சர்வீஸ் சார்ஜ் ரூ.50!!
X

சதாப்தி ரயிலில் பயணித்த பயணி ஒருவர் ஒரு கப் டீ வாங்கியதற்கு IRCTC 70 ரூபாய்க்கு பில் கொடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போபாலில் இருந்து டெல்லிக்கு இயக்கப்படும் சதாப்தி ரயிலில் கடந்த ஜூன் 28ஆம் தேதி பயணித்த பயணி ஒருவர் ரயிலில் டீ வாங்கினார். அந்த தேநீரின் விலை வெறும் 20 ரூபாய்தான்.

ஆனால் அதற்காக விதிக்கப்பட்ட சேவைவரி (service charge) 50 ரூபாய் என ரயில்வே ஊழியர் கொடுத்த ரசீதில் குறிப்பிட்டுள்ளதை கண்டு அந்த பயணி அதிர்ச்சி அடைந்தார்.

இதனையடுத்து அந்த பயணி டீக்கான ரசீதை போட்டோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து, “ரூ.20க்கான டீக்கு 50 ரூபாய்க்கு வரி விதிக்கிறார்கள். கொள்ளையாக இருக்கிறதேஎன பதிவிட்டார்.

irctc tea

இந்த பதிவு நெட்டிசன்களிடையே வைரலாகி IRCTCக்கு தத்தம் புகார்களையும் முன்வைத்திருக்கிறார்கள். இந்த நிலையில், டீக்கு 70 ரூபாய் பில் கொடுத்ததற்கான காரணத்தை ரயில்வே நிர்வாகம் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது

2018ஆம் ஆண்டு விடுக்கப்பட்ட சுற்றறிக்கையின்படி, ராஜ்தானி அல்லது சதாப்தி ரயில்களில் பயணிக்கும் பயணிகள் முன்பே உணவுகளை முன்பதிவு செய்யாமல் பயணத்தின் போது உணவு ஆர்டர் செய்தால் அதற்காக 50 ரூபாய் சேவை கட்டணம் செலுத்த வேண்டும்.

irctc tea

அது ஒரு கப் டீ அல்லது காபிக்கும் பொருந்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், சதாப்தி, ராஜ்தானி ரயில்களில் முதலில் கட்டாய தேர்வாக இருந்த இந்த அறிவிப்பு பின்னர் விருப்ப தேர்வாக மாற்றப்பட்டுள்ளது.

newstm.in

Next Story
Share it