Theme Check

அதிர்ச்சி! கிண்டர் ஜாய் சாக்லெட்டுக்கு தடை!!

அதிர்ச்சி! கிண்டர் ஜாய் சாக்லெட்டுக்கு தடை!!

அதிர்ச்சி! கிண்டர் ஜாய் சாக்லெட்டுக்கு தடை!!
X

கிண்டர் ஜாய் சாக்லெட் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு பெல்ஜியத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் குழந்தைகள் அதிகம் விரும்பிச் சாப்பிடும் சாக்லேட்டுகளில் ஒன்றான கிண்டர் ஜாய் சாப்பிட்டால் குடற்காய்ச்சல் நோய் ஏற்படுவது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளிலும் கிண்டர் ஜாய் சாக்லேட் சோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் குழந்தைகள் பாதிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

kinder joy

இதனை அடுத்து கிண்டர் ஜாய் சாக்லேட்டை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் பெல்ஜியம் நாட்டின் உணவு பாதுகாப்பு ஆணையம் தடை வித்துள்ளது. மேலும் பெல்ஜியத்தில் செயல்பட்டு வரும் பெரேரோ குழுத்தின் சாக்லேட் தொற்சாலையை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையடுத்து பெரேரோ குழுமம் கிண்டர் ஜாய் சாக்லேட்டை வெளிநாட்டு சந்தையில் இருந்து திரும்பப் பெற்றுள்ளது. ஆனால் விற்பனை செய்யப்படும் கிண்டர் ஜாய் சாக்லேட்டில் குடற்காய்ச்சல் நோய் ஏற்படுத்தும் பாக்டீரியா இருப்பது உறுதி செய்யப்படவில்லை என பெரேரோ குழும நிறுவனம் தெரிவித்துள்ளது.

kinder joy

இந்நிலையில் இந்தியாவிலும் கிண்டர் ஜாய் சாக்லேட்கள் திரும்பப் பெறப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து கூறிய இந்திய அதிகாரி, கிண்டர் ஜாய் சாக்லேட்டுக்கும், கிண்டர் ஜாய் சர்ப்ரைஸ் சாக்லேட்டுக்கும் இடையே வேறுபாடுகள் உள்ளன. இதனால் சாக்லேட் திரும்பப் பெறப்படாது எனத் தெரிவித்தள்ளார்.

newstm.in

Next Story
Share it