Theme Check

அதிர்ச்சி! கஞ்சா போதையில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!!

அதிர்ச்சி! கஞ்சா போதையில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!!

அதிர்ச்சி! கஞ்சா போதையில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!!
X

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் அருகே 6ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

மாவட்ட குழந்தைகள் நல அதிகாரியை தொடர்பு கொண்ட பெண் ஒருவர் 6ஆம் வகுப்பு படிக்கும் தனது மகளை இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து வருவதாகவும் தட்டி கேட்டால், மிரட்டுவதாகவும் கூறினார்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த குழந்தைகள் நல அதிகாரிகள் அந்த பெண்மணியின் வீட்டிற்கு சென்ற போது இளைஞர் ஒருவர் அந்த வீட்டில் இருந்து தப்பியோடிய நிலையில் அந்த பெண் மற்றும் சிறுமியை மீட்டு விசாரணை நடத்தினர்.

சின்னத்துறை மீனவ கிராமத்தை சேர்ந்த அந்த பெண் கடந்த ஒரு வருடத்திற்கு முன் தனது கணவரை பிரிந்த நிலையில் தேங்காய்பட்டணம் அடுத்த அம்சி என்ற பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து து மகன் மற்றும் மகளுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

abuse 1

இந்நிலையில் புதுக்கடை பகுதியை சேர்ந்த செய்யதலி என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. செய்யதலியும் அந்த பெண்ணுடன் நெருங்கி பழகி ஆசை வார்த்தை கூறி கணவன் மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் செய்யதலி தனது தம்பி ரியாஸ் என்று கூறி ஒரு நபரை வீட்டில் தங்கவைத்துள்ளார். அந்த நபர் கஞ்சா போதையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து கேட்டதற்கு இருவரும் சேர்ந்து பெண்ணை மிரட்டியுள்ளனர்.

குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண்ணின் வாக்குமூலத்தை புகாராக கொடுத்த குழந்தைகள் நல அதிகாரிகள் அந்த சிறுமியை சிகிச்சை மற்றும் மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மத்துவமனையில் சேர்த்தனர்.

arrest

அங்கு சிறுமி கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து வழக்கு பதிவு செய்த குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் கஞ்சா வியாபாரி ரியாஸை கைது செய்து நாகர்கோவில் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

newstm.in

Next Story
Share it