Theme Check

அதிர்ச்சி! மீண்டும் 4 ஆயிரத்தை தாண்டிய தினசரி கொரோனா பாதிப்பு!!

அதிர்ச்சி! மீண்டும் 4 ஆயிரத்தை தாண்டிய தினசரி கொரோனா பாதிப்பு!!

அதிர்ச்சி! மீண்டும் 4 ஆயிரத்தை தாண்டிய தினசரி கொரோனா பாதிப்பு!!
X

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் 4 ஆயிரத்தை தாண்டி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,041 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், 84 நாட்களுக்குப் பிறகு இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு 4 ,31,68,585ஆக உள்ளது. அதேபோல், கோவிட் பாதிப்பால் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 21,177ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10 உயிரிழப்புகள் பதிவாகி உள்ளன.

corona 1

நாட்டின் மொத்த கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 5,24,651ஆக உள்ளது. கொரோனா அலை ஓய்ந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வரும் வேளையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் மீண்டும் தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

நீண்ட காலத்திற்கு பின்னர் மீண்டும் தினசரி பாதிப்புக்கு எண்ணிக்கை அம்மாநிலத்தில் ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். நாட்டில் இதுவரை 193.83 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.

newstm.in

Next Story
Share it