அதிர்ச்சி! வயிற்று வலியால் பிரபல நடிகர் மரணம்!!
அதிர்ச்சி! வயிற்று வலியால் பிரபல நடிகர் மரணம்!!

வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பெங்காலி நடிகர் அபிஷேக் சாட்டர்ஜி, நேற்று நள்ளிரவு திடீரென காலமானார். அவருக்கு வயகு 56.
அபிஷேக் சாட்டர்ஜி டோலிகஞ்சில் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இவர், நேற்று காலை முதல் மிகவும் சிரமப்பட்டார். இருந்தும் ரியாலிட்டி ஷோ படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது, மீண்டும் அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது.

படப்பிடிப்பை பாதியில் ரத்து செய்துவிட்டு வீடு திரும்பினார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு இறந்தார். இவரது மறைவுக்கு மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பெங்காலி திரைப்படத் துறையினர், ரசிகர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இன்று இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. ‘பத்போலா’ என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர், ப்ரோசென்ஜித், தபஸ் பால் போன்ற நடிகர்களின் காலத்திலும் நடித்து புகழ் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in

