அதிர்ச்சி! பிரபல நடிகர் கத்தியால் குத்தி படுகொலை!!
அதிர்ச்சி! பிரபல நடிகர் கத்தியால் குத்தி படுகொலை!!

பிரபல நடிகர் சதீஷ்வஜ்ரா கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சதீஷ் வஜ்ரா கன்னட திரைப்படமான லவோக்ரி உள்பட சில படங்களில் நடித்துள்ளார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புதான் சதீஷின் மனைவி தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் சதீஷ் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார்.
பெங்களூரு ஆர்ஆர் நகர் பகுதியில் இந்த கொலை நடந்துள்ளது. நேற்றிரவு சதீஷ் வீட்டிற்கு வந்துள்ளார். இன்று வீட்டின் முன்பக்க பகுதியை சுத்தம் செய்யும் போது ரத்தக்கறை படிந்திருப்பதை பார்த்த வீட்டு உரிமையாளர் சிசிடிவி கேமராவை சோதனை செய்தார்.

அதில், நள்ளிரவு 12:30 மணியளவில் இரண்டு மர்ம நபர்கள் வந்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. வந்தவர்கள், சதீஷின் பைக்கையும் எடுத்துச் சென்றுள்ளனர். சிசிடிவியில் சேகரிக்கப்பட்ட விவரங்களின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன் விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவரது உடலை விக்டோரியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ள ஆர்.ஆர். நகர் போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in

