Theme Check

அதிர்ச்சி! பிரபல நடிகை காலமானார்!!

அதிர்ச்சி! பிரபல நடிகை காலமானார்!!

அதிர்ச்சி! பிரபல நடிகை காலமானார்!!
X

மலையாளம், தமிழ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிரபல நடிகை கேபிஏசி லலிதா காலமானார். அவருக்கு வயது 74.

லலிதா, தமிழில் காதலுக்கு மரியாதை, உள்ளம் கேட்குமே, பரமசிவன், கிரீடம், அலைபாயுதே, மாமனிதன் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் 1991 மற்றும் 2001ஆம் ஆண்டுகளுக்கான சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதையும், 4 முறை கேரளாவின் மாநில அரசு விருதையும் பெற்றுள்ளார்.

தென்னிந்தியா முழுவதும் சுமார் 550 திரைப்படங்களில் நடித்த நடிகை லலிதா, தேவர் மகன் உள்ளிட்ட படங்களை இயக்கிய, இயக்குநர் பரதனின் மனைவி. இவருடைய மகன் சித்தார்த் பரதன் மிக பிரபலமான நடிகர் மற்றும் இயக்குநர்.

kpac lalitha (2)

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இவர், தற்போது உயிரிழந்தார். இவரது இந்த மறைவு செய்தி கேட்டு ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் தங்கள் நினைவலைகளை பகிர்ந்து வருகின்றனர்.

திரைப்பிரபலங்கள் மட்டுமல்லாது பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it