அதிர்ச்சி! பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகரிப்பு!!
அதிர்ச்சி! பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகரிப்பு!!

பொறியியல் மற்றும் தொழிநுட்ப கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் கல்விக் கட்டண விதிகளை அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு மாற்றியமைத்துள்ளது.
அதன்படி, நாடு முழுவதும் உள்ள தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் பி.இ, பி.டெக்., பி.ஆர்க், போன்ற இளநிலை பொறியியல் படிப்புகளுக்கு ஒரு செமஸ்டர் காலத்துக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.79,600 ஆகவும் அதிகபட்ச கட்டணம் ரூ.1,89,800 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பழைய முறையில், குறைந்தபட்ச கட்டணம் ரூ.55,000, அதிகபட்ச கட்டணம் ரூ.1.15 லட்சம் என்றிருந்தது. பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ படிப்பதற்கான ஒரு செமஸ்டர் காலத்துக்கு குறைந்தபட்சமாக 67,900 ரூபாயும், அதிகபட்சமாக 1,40,900 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க் போன்ற முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கு ஒரு செமஸ்டர் காலத்துக்கு குறைந்தபட்சமாக 1,41,200 ரூபாயும், அதிகபட்சமாக 3,04,000 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, 3 ஆண்டு எம்சிஏ படிப்புக்கு, ஒரு செமஸ்டர் காலத்துக்கு குறைந்தபட்சமாக 88,500 ரூபாயும், அதிகபட்சமாக 1,94,100 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2 ஆண்டு எம்பிஏ படிப்புக்கு குறைந்தபட்சமாக ரூ.85,000, அதிகபட்சமாக ரூ.1,95,200 என்று கட்டணம் நிர்ணயக்கப்பட்டுள்ளது.

பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கு 7ஆவது மத்திய ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில், ஊதியம் வழங்கப்பட உள்ளது. அதன்படி, உதவிப் பேராசிரியர்களுக்கு மாதம் ரூ.1,37,189 பேராசிரியர்களுக்கு ரூ.2,60,379 என்று ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
newstm.in

