Theme Check

அதிர்ச்சி! கேஸ் சிலிண்டர் விலை வரலாறு காணாத உயர்வு!!

அதிர்ச்சி! கேஸ் சிலிண்டர் விலை வரலாறு காணாத உயர்வு!!

அதிர்ச்சி! கேஸ் சிலிண்டர் விலை வரலாறு காணாத உயர்வு!!
X

கேஸ் சிலிண்டரின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருவதையடுத்து பிரிட்டனில் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். இதனால் அங்கு சமையல் எரிவாயுவின் தேவை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.

இதனால் அங்கு வரலாறு காணாத அளவுக்கு எரிவாயு சிலிண்டரின் விலை உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டின் துவக்கத்தில் விற்பனை செய்யப்பட்டதைவிட 300% அளவுக்கு சமையல் சிலிண்டரின் விலை அதிகரித்துள்ளது.

மின்சாரம், பெட்ரோல். டீசல் பயன்பாட்டுக்கான செலவும் இனிவரும் காலங்களில் அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி 2022-23 நிதியாண்டு துவக்கத்தில் சிலிண்டர், பெட்ரோல்,டீசல், மின்சாரம் ஆகியவற்றின் செலவு சராசரியாக 70 ஆயிரம் ரூபாய் அதிகரிக்கும் என தெரிகிறது.

cylinder 2

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரிட்டனில் பல்வேறு தொழில் துறைகள் முடங்கியுள்ளதால் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் மாதந்திர வருவாய் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய நெருக்கடியான சூழலில் சமையல் எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து வருவது பிரிட்டன் மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

newstm.in

Next Story
Share it