அதிர்ச்சி! விந்தணுவில் கண்டறியப்பட்ட குரங்கம்மை டி.என்.ஏ!!

அதிர்ச்சி! விந்தணுவில் கண்டறியப்பட்ட குரங்கம்மை டி.என்.ஏ!!

அதிர்ச்சி! விந்தணுவில் கண்டறியப்பட்ட குரங்கம்மை டி.என்.ஏ!!
X

லண்டனில் உள்ள குயின் மேரி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், கடந்த ஏப்ரல் 27 முதல் ஜூன் 24 வரை பாதிக்கப்பட்ட 528 நபர்கள வைத்து நடத்திய ஆய்வில், நெருக்கமாக இருப்பவர்களின் மூச்சுக்காற்று மூலமும், ஆடைகள் மூலமும் எளிதாக குரங்கம்மை பரவலாம் என தெரியவந்துள்ளது.

மேலும் 95 சதவீத குரங்கம்மை பரவலுக்கு பாலியல் நெருக்கங்களே காரணம் எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. தொற்று பாதித்தவர்களில் 98 சதவீத நபர்கள் ஓரினச் சேக்கையாளர்கள் அல்லது இருபாலின ஆண்கள் என கண்டறிந்துள்ளனர்.

75 சதவீத நபர்கள் வெள்ளையர்கள் எனவும் 41 சதவீதம் பேருக்கு மனித நோயெதிர்ப்பு குறைபாடு வைரஸ் தொற்று இருந்ததும் தெரியவந்துள்ளது. இவர்களில் அரிப்புடன் 62 சதவீதத்தினருக்கு காய்ச்சலும், 41 சதவீததினருக்கு சோர்வும், 31 சதவீதத்தினருக்கு உடல்வலியும், 27 சதவீதத்தினருக்கு தலைவலியும் 56 சதவீதத்தினருக்கு நிணநீர் அழற்சியும் இருப்பது கண்டறியப்பட்டது.

monkey pox test

பரிசோதிக்கப்பட்ட 377 நபர்களில், 109 பேருக்கு தொற்று பாலியல் ரீதியாக பரவியுள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 32 நபர்களை சோதித்ததில், 29 பேருக்கு விந்தணுக்களில் குரங்கம்மை டி.என். இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் இதுவரை குரங்கம்மையில் அறியப்படாத புதிய பாதிப்புகளும் உள்ளதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

சைபில்ஸ் (Syphilis), ஹேர்ப்ஸ் (Herps), போன்ற பாலியல் ரீதியாக பரவும் நோய்தொற்றுக்களின் அறிகுறிகளை போலவே குரங்கம்மைக்கும் அறிகுறிகள் இருக்கும் எனவும், வாய் அல்லது ஆசனவாய் பகுதியில் புண்கள் வருவதும் இதன் அறிகுறிகள் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

monkey pox test 2

இந்த தொற்றை கண்டறியாவிட்டால், இதை குணப்படுத்துவது கடினம் எனவும் கூறினர். மேலும் இந்த ஆராய்ச்சி வருங்காலத்தில் இந்த தொற்றை கண்டறிய உதவியாக இருக்கும் எனவும், பாதிப்பை குறைக்கவும், தடுப்பூசி கண்டறியவும் இது உதவியாக இருக்கும் எனவும் அந்த குழு தெரிவித்தது.

newstm.in

Next Story
Share it