அதிர்ச்சி! கோழிக்கறி சாப்பிட்ட மாணவர் மர்ம மரணம்!!

அதிர்ச்சி! கோழிக்கறி சாப்பிட்ட மாணவர் மர்ம மரணம்!!

அதிர்ச்சி! கோழிக்கறி சாப்பிட்ட மாணவர் மர்ம மரணம்!!
X

தனது கல்லூரி உணவகத்தில் கோழிக்கறி சாப்பிட்ட மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கடப்பா பகுதியை சேர்ந்த தீரஜ் (20) என்ற இளைஞர் சென்னை செம்மஞ்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.. மூன்றாமாண்டு படித்து வந்தார். இவர் சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தனது நண்பா்களுடன் தங்கியிருந்தார்.

இந்நிலையில் வழக்கபோல், தீரஜ் மதிய உணவை கல்லூரி உணவகத்தில் சாப்பிட்டுள்ளார். மேலும் அன்று கோழிகறி குழம்பு என்பதால் விரும்பி உண்டுள்ளார். சாப்பிட்டு முடித்த சிறிது நேரத்திலேயே அவர் வாந்தி எடுத்துள்ளார்.

Vomiting

அதிக நேரம் வாந்தி எடுத்ததால் தீரஜின் நண்பர்கள், அவரை விடுதிக்கு அழைத்து சென்றனர். அங்கு ஓய்வு எடுத்தும் பயனில்லை என்பதால், அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோத்த மருத்துவர்கள், அவரை வேறு மருத்துவமனைக்கு கூட்டி செல்ல அறிவுறுத்தினர்.

வாந்தி எடுத்ததோடு, மூச்சு விட முடியாமல் அவதிபட்ட மாணவர், பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து காவல்துறையினருக்கு தகவல் அளித்த பிறகு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் தீரஜின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்கு இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

death

மேலும் வழக்குப்பதிவு செய்து, தீரஜின் மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோழிக்கறி சாப்பிட்ட பிறகு கல்லூரி மாணவர் இறந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Next Story
Share it