Theme Check

அதிர்ச்சி! தமிழகத்தில் 8 பேருக்கு புதிய வகை கொரோனா!!

அதிர்ச்சி! தமிழகத்தில் 8 பேருக்கு புதிய வகை கொரோனா!!

அதிர்ச்சி! தமிழகத்தில் 8 பேருக்கு புதிய வகை கொரோனா!!
X

தமிழகத்தில் 8 பேருக்கு BA5 வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் புதிய கட்டிடங்களை மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், வழக்கமான மரபணு பகுப்பாய்வுக்கு 139 மாதிரிகள் அனுப்பப்பட்டதாக தெரிவித்தார்.

அதில் 8 பேருக்கு BA5 வகையும், 4 பேருக்கு BA 4 வகை கொரோனாவும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறினார். இவை இரண்டுமே ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ். தமிழ்நாட்டில் முதல் முறையாக BA5 உறுதி செய்யப்பட்டுள்ளது.

corona 23

தமிழகத்தில் 8 பேரும் குணமடைந்து விட்டனர். கொரோனா நோயாளிகள் 790 பேரில் 46 பேர் தற்போது தமிழ்நாட்டில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 16 பேர் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சையில் உள்ளனர். இதில் 6 பேர் ஐசியுவில் உள்ளனர்.

முன்னதாக தெலங்கானா, மகாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களில் ஏற்கனவே இந்த வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்திலும் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

radha

தொடர்ந்து பேசிய ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் ஒளிவு மறைவு இன்றி செயல்பட்டு வருவதாக கூறினார், மிக மிக குறைவான விலையில் தான் மருந்து பொருட்கள் வாங்குகிறார்கள் எனவும் தெரிவித்தார்.

newstm.in

Next Story
Share it