அதிர்ச்சி! அரசுப்பேருந்து நடத்துநர் மீது வடமாநிலத்தவர் தாக்குதல்!!
அதிர்ச்சி! அரசுப்பேருந்து நடத்துநர் மீது வடமாநிலத்தவர் தாக்குதல்!!

பெரம்பலூர் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் இருந்து, திருப்பட்டூர் வரை இயக்கப்படும் நகரப்பேருந்தில், ஓட்டுநர் பாலகிருஷ்ணன் மற்றும் நடத்துனர் ஆறுமுகம் (50) ஆகியோர் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் பேருந்து திருப்பட்டூர் நோக்கி சென்று கொண்டிருந்த போது, சிறுவாச்சூர் கிராமத்தில் வட மாநிலத்தை சேர்ந்த 6 பேர் பயணம் செய்துள்ளனர் . 3 பேர் முன்பக்கமும், 3 பேர் பின்பக்கமும் இருந்தனர்.
நடத்துனர் டிக்கெட் கேட்டபோது முன் பக்கம் இருந்தவர்கள் பின் பக்கம் எடுப்பார்கள் என்றும், பின் பக்கம் இருந்தவர்கள் முன்பக்கம் எடுப்பார்கள் என்றும் கூறினா். தொடர்ந்து அவர்கள் இறங்கும் இடமான விஜயகோபாலபுரம் வந்துவிட்டதால் டிக்கெட் எடுக்காமல் இறங்கினர்.

அவர்களை மறித்து நடத்துனர் ஆறுமுகம் டிக்கெட்டை காட்டுங்கள் என்று கேட்டபொழுது பயணம் செய்த 6 பேரும் நடத்துனரை தாக்கி கீழே தள்ளி உள்ளனர். இதில் பேருந்தில் இருந்து சாலை ஓரத்தில் கீழே விழுந்த ஆறுமுகம் தலையில் அடிபட்டு பலத்த காயம் அடைந்தார்.
ஓட்டுனர் மற்றும் பயணிகள் உதவியுடன் நடத்துனர் ஆறுமுகம் படுகாயத்துடன் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து காவல் நிலையத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டது.
விசாரணையில் வடமாநிலத்தவர்களான அவர்கள் விஜயகோபாலபுரம் பகுதியிலுள்ள எம்ஆர்எப் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருவதாக தெரியவந்தது. அவர்களில் அபிநந்தன் குமார்தாஸ் என்ற நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதுடன், இவருடன் பயணித்த மற்ற அனைவரையும் தேடி வருகின்றனர்.
newstm.in

