Theme Check

அதிர்ச்சி! கொரோனா வந்தவர்களுக்கு மூளை பாதிக்க வாய்ப்பு!!

அதிர்ச்சி! கொரோனா வந்தவர்களுக்கு மூளை பாதிக்க வாய்ப்பு!!

அதிர்ச்சி! கொரோனா வந்தவர்களுக்கு மூளை பாதிக்க வாய்ப்பு!!
X

கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களின் மூளை செயல்பாட்டில் மந்தம் ஏற்படுவதாக ஆய்வறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா மக்களை ஆட்டிவைத்து தற்போது சற்றே அடங்கியுள்ளது. முதல் அலை தொடங்கி மூன்றாம் அலை வரை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதிலும் இரண்டாம் அலையில் ஏராளமானோர் உயிரிழந்தனர்.

அதே போல் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு பல்வேறு தாக்கம் உடல் அளவில் இருப்பதாக பல்வேறு ஆய்வுகள் மூலம் தெரியவந்தது. குறிப்பாக உடல் சோர்வு, முடி உதிர்தல் உள்ளிட்ட பாதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

covidbrain

இந்நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களின் மூளை செயல்பாட்டில் மந்தம் ஏற்படுவதாக ஆய்வறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளது.

NATURE எனும் மருத்துவ இதழில் ஆய்வறிக்கையின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில், லேசான கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் மூளையிலும் பாதிப்புகள் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

covidbrain

கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கள் மற்றும் தொற்று ஏற்படாதவர்களின் மூளை செயல்பாட்டை ஆய்வு செய்துள்ளனர். வழக்கமாக 10 ஆண்டுகளில் ஏற்படக்கூடிய நினைவுத்திறன் பாதிப்பு, கொரோனாவுக்கு ஆளானவர்களுக்கு ஏற்படுவதாக இதில் கண்டறியப்பட்டுள்ளது.

newstm.in

Next Story
Share it