அதிர்ச்சி! நாயை குளிப்பாட்ட மறுத்த காவலர் சஸ்பெண்ட்!!
அதிர்ச்சி! நாயை குளிப்பாட்ட மறுத்த காவலர் சஸ்பெண்ட்!!

எஸ்.பி., வீட்டில் நாயை குளிப்பாட்ட மறுத்த காவலர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் காவல்துறை கட்டுப்பாட்டு பிரிவு எஸ்.பி.யாக உள்ள நவநீத் ஷர்மா என்பவர் வீட்டிற்கு பாதுகாப்பு பணிக்கு காவல்துறையினர் நியமிக்கப்படுவது வழக்கம். அதன்படி ஆகாஷ் என்பவர் எஸ்.பி வீட்டுக்கு பாதுகாப்பு பணியில் இருந்து வருகிறார்.
இந்நிலையில், எஸ்.பி. வீட்டில் இருந்தவர்கள், அவர்கள் வளர்த்து வரும் செல்ல நாயை குளிப்பாட்டி விடுமாறு கூறியுள்ளனர். அதற்கு ஆகாஷ் மறுப்பு தெரிவித்துள்ளார். அவர்கள் மிரட்டியும் பார்த்துள்ளனர். ஆனாலும் தனக்கு விருப்பமில்லை என்று உறுதியாக கூறிவிட்டார்.

இந்த சம்பவம் குறித்து, எஸ்.பி.,யிடம் வீட்டில் உள்ளவர்கள் தெரிவித்தனர். இதனால் கோபமடைந்த எஸ்.பி., தனது வீட்டில் ஆகாஷ் பொருட்களை சேதப்படுத்தியதாக பொய்யான காரணத்தை கூறி சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டுள்ளார்.
தன் மீது பொய்யான குற்றச்சாட்டை கூறி, எஸ்.பி. தன்னை சஸ்பெண்ட் செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட ஆகாஷ் டி.ஜி.பி.,-யிடம் புகார் அளித்துள்ளார். புகார் மனுவை பெற்றுக்கொண்ட டி.ஜி.பி., இது குறித்து விசாரிக்குமாறு உத்தரவிட்டார்.
விசாரித்ததில், ஆகாஷ் மீது எந்த தவறும் இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து காவலர் ஆகாஷின் சஸ்பெண்டை ரத்து செய்து டி.ஜி.பி. உத்தரவிட்டார். மேலும் அவர் திருவனந்தபுரம் நகர காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார்.
newstm.in

