அதிர்ச்சி! தமிழிசையின் ஆளுநர் பதவிக்கு சிக்கல்!!
அதிர்ச்சி! தமிழிசையின் ஆளுநர் பதவிக்கு சிக்கல்!!

தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்தபோது தமிழிசை சவுந்தரராஜன் கடந்த 2018 செப்டம்பர் 3ஆம் தேதி சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும் விமானத்தில் பயணம் செய்தார்.
அப்போது, தூத்துக்குடி விமான நிலையத்தில் அவரை பார்த்து சோபியா என்ற மாணவி பாஜகவுக்கு எதிராக முழக்கம் எழுப்பினார். இதனை அடுத்து தமிழிசைக்கும், அந்த பெண்ணுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து மாணவி சோபியாவுக்கு எதிராக விமான நிலைய அதிகாரிகளிடம் தமிழிசை சவுந்தரராஜன் புகார் அளித்தார். விசாரணைக்குப் பிறகு சோபியாவை விமான நிலைய போலீசார் கைது செய்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தி வந்தது. இந்த விசாரணை நிறைவு அடைந்த நிலையில் இதன் மீதான தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதில் தமிழிசை சவுந்தரராஜன் முன்பாக பாஜகவை விமர்சித்ததாக மாணவி சோபியா கைது செய்யப்பட்ட விவகாரத்தில் காவல் துறையினர் மனித உரிமை மீறலில் ஈடுபட்டு இருப்பதாக மனித உரிமை ஆணைய நீதிபதி கூறினார்.
மேலும் பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தைக்கு ரூ.2 லட்சம் இழப்பீடாக வழங்க தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணைய நீதிபதி உத்தரவிட்டார். இந்த விவகாரத்தில் தொடர்புடைய தமிழிசை சவுந்தரராஜன் தற்போது புதுச்சேரி மற்றும் தெலங்கானா மாநில ஆளுநராக உள்ளார்.

இந்நிலையில் மாநில ஆளுநராக உள்ள தமிழிசை சவுந்தரராஜன் சம்பந்தப்பட்ட பிரச்னையில் மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக மாநில மனித உரிமை ஆணையம் கருத்து தெரிவித்து இருப்பது ஆளுநருக்கு ஏற்பட்ட பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
newstm.in

