Theme Check

அதிர்ச்சி! இளம்பெண் மீது உறவினர்கள் கொடூர தாக்குதல்!! VIDEO

அதிர்ச்சி! இளம்பெண் மீது உறவினர்கள் கொடூர தாக்குதல்!! VIDEO

அதிர்ச்சி! இளம்பெண் மீது உறவினர்கள் கொடூர தாக்குதல்!! VIDEO
X

நிலத்தகராறில் இளம்பெண்ணை அவரது உறவினர்கள் கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி பாகூர் பகுதியை சேர்ந்த ஆதிலட்சுமி (50) என்பவர் தனது மகன் பிரியதர்ஷன், மகள் பிரியதர்ஷினியுடன் வசித்து வருகிறார். அவரது பக்கத்து வீட்டில் உறவினர்களான செல்வி - சுப்பிரமணி தம்பதியினர் வசித்து வருகின்றனர்.

இரு குடும்பத்தினருக்கும் இடையே வீட்டு மனை பிரச்னை இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஆதிலட்சுமியின் மகன் வீட்டின் அருகே இருக்கும் இரு குடும்பத்திற்கும் சொந்தமான காலி மனையை செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளார்.

pud

இதனை கண்ட செல்வி மற்றும் அவரது கணவர் சுப்பிரமணி, ஆபாசமாக திட்டியுள்ளனர். பதிலுக்கு ஆதிலட்சுமியும் அவரது மகளும், சுப்பிரமணி தம்பதியினரை திட்டியதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த தம்பதியினர், தாய் ஆதிலட்சுமி மற்றும் மகள் பிரியதர்ஷினியை கட்டையால் தாக்கி உள்ளனர்.

இதனை அங்கிருந்தவர்கள் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்தது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. மேலும், இது குறித்து பாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


newstm.in

Next Story
Share it