Theme Check

அதிர்ச்சி! பள்ளி மாணவிக்கு தொடர் பாலியல் தொல்லை!!

அதிர்ச்சி! பள்ளி மாணவிக்கு தொடர் பாலியல் தொல்லை!!

அதிர்ச்சி! பள்ளி மாணவிக்கு தொடர் பாலியல் தொல்லை!!
X

மதுரை மாவட்டம் மேலூர் அருகே தொடர் பாலியல் தொந்தரவால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவி ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தும்பைப்பட்டியைச் சேர்ந்த பழனியப்பன் - சபரி தம்பதியினருக்கு 18 வயதில் ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இவர்களது பெண் குழந்தை மேலூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார்.

இந்நிலையில், அதே ஊரைச் சேர்ந்த சுல்தான் என்பவரின் மகன் நாகூர்அனிபா (26) என்பவருடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு நாகூர் அனிபா மாணவியை கடத்திச் சென்று தொடர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

rape

இதையடுத்து மாணவியின் தாய் சபரி அளித்த புகாரின் பேரில், மேலூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள நாகூர் அனிபாவை தேடி வருகின்றனர்.

இந்நிலையில், பாலியல் தொந்தரவு காரணமாக பாதிக்கப்பட்ட மாணவி மிகவும் ஆபத்தான நிலையில் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

newstm.in

Next Story
Share it