Theme Check

அதிர்ச்சி! சக வீரர்களை சுட்டுவிட்டு ராணுவ வீரர் தற்கொலை!!

அதிர்ச்சி! சக வீரர்களை சுட்டுவிட்டு ராணுவ வீரர் தற்கொலை!!

அதிர்ச்சி! சக வீரர்களை சுட்டுவிட்டு ராணுவ வீரர் தற்கொலை!!
X

காஷ்மீரில் சக வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு எல்லைப்பாதுகாப்பு படை வீரர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் இந்தோ - திபெத் எல்லைப்பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அந்த வகையில் உதம்பூர் மாவட்டத்தில் இந்தோ-திபெத் படையின் 8ஆவது பிரிவு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

அந்த பிரிவில் படைவீரராக பணியாற்றி வந்த பூபேந்திர சிங் என்பவர் நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் பணியில் இருந்தார். அப்போது, அங்கு பணியில் இருந்த சக வீரர்களுக்கு பூபேந்திர சிங்கிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

army gun

வாக்குவாதம் முற்றிய நிலையில் பூபேந்திரர் தனது துப்பாக்கியை கொண்டு சக வீரர்களை சரமாரியாக சுட்டார். பின்னர், தனது துப்பாக்கியை கொண்டு தன்னைத்தானே சுட்டு பூபேந்திர தற்கொலை செய்துகொண்டார்.

பூபேந்திர சிங் சுட்டதில் 3 வீரர்கள் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த 3 வீரர்களும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சக வீரர்கள் மீது பூபேந்திர சிங் துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கான காரணம் என்ன என்பது குறித்து பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it