அதிர்ச்சி! மதுபோதையில் பள்ளிக்குள் நுழைந்து மாணவியின் தந்தை ரகளை!!
அதிர்ச்சி! மதுபோதையில் பள்ளிக்குள் நுழைந்து மாணவியின் தந்தை ரகளை!!

தஞ்சை அருகே மதுபோதையில், பள்ளிக்குள் புகுந்து மாணவி ஒருவரின் தந்தை தகராறில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ள பெரம்பூரில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைபள்ளியில் நேற்று காலை பிரேயர் நடந்து கொண்டு இருந்தபோது, அந்த பள்ளியில் படிக்கும் மாணவியின் தந்தை செல்வக்குமார் என்பவர் மதுபோதையில் பள்ளிக்குள் நுழைந்து தகராறு செய்துள்ளார்.
அப்போது பள்ளியை விட்டு வெளியே செல்லுமாறு தலைமை ஆசிரியை கூறி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த செல்வக்குமார் தலைமை ஆசிரியை அருவருக்க கூடிய ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளார் . இதனை தட்டி கேட்ட உடற்கல்வி ஆசிரியர் சண்முகத்தை அறைந்துள்ளார்.

மேலும் இதனை தடுக்க முயன்ற மற்றொரு ஆசிரியருக்கு அடி விழுந்தது. இது குறித்து தலைமை ஆசிரியை அளித்த புகாரில் பள்ளிக்குள் ரகளையில் ஈடுப்பட்டு, தலைமை ஆசிரியை இருக்கையில் அமர்ந்து ஆசிரியர் சட்டையை இழுத்து தகராறில் ஈடுபட்ட மாணவியின் தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர்.
காவல்துறையின் விசாரணையில், பள்ளி நேரத்தில் தனது மகளை செல்வக்குமார் மதுபோதையில் பார்க்க வந்ததாகவும், அதற்கு தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அனுமதி அளிக்காததால் அவர் தகராறில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.
newstm.in

