அதிர்ச்சி! மனைவி, மகளுக்கு விஷம் கொடுத்து ஆசிரியர் தற்கொலை!!

அதிர்ச்சி! மனைவி, மகளுக்கு விஷம் கொடுத்து ஆசிரியர் தற்கொலை!!

அதிர்ச்சி! மனைவி, மகளுக்கு விஷம் கொடுத்து ஆசிரியர் தற்கொலை!!
X

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திகிராமம் பகுதியை சேர்ந்த முகமது பரீத் (46 ) என்பவர் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கு நஸ்ரின் பானு என்ற மனைவியும், ஜூஹினாச் என்ற ( 16 ) மகளும் இருந்தனர்.

இவர் அரசு வங்கியிலும், கூட்டுறவு வங்கியிலும் கடன் வாங்கி வீடு கட்டியதாக கூறப்படுகிறது. இதனால் குடும்பத்திற்குள் பிரச்னை ஏற்பட்டது. இதன் காரணமாக முகமது பரீத் தென்னை மரத்துக்கு பயன்படுத்தும் சல்பர் மாத்திரையை கரைத்து தானும் குடித்து அவர்களுக்கும் கொடுத்து தற்கொலைக்கு முயன்றார்.

தகவலறிந்த உறவினர்கள் அவர்களை மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும், மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி 17 வயது ஜூஹினாச் உயிரிழந்தார்.

karur-suicid

பரீத் மற்றும் நஸ்ரின் பானு உடல் நிலைமை மோசமாக இருப்பதால் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதனையடுத்து முகமது பரீத்தையும், அவரது மனைவியையும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். வரும் வழியில் முகமது பரீத் உயிரிழந்தார்.

அவரது மனைவி நஸ்ரின் பானு (வயது 39) கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உயிரிழந்த முகமது பரீத் மற்றும் அவரது மகளின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தாந்தோன்றிமலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it