Theme Check

அதிர்ச்சி! பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய காதலன்!!

அதிர்ச்சி! பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய காதலன்!!

அதிர்ச்சி! பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய காதலன்!!
X

பள்ளி மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிய நபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை அடுத்த குன்றத்தூர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி அரசு பள்ளியில் 11,ஆம் வகுப்பு பயின்று வருகிறார். சிறுமி அடிக்கடி வயிறு வலி ஏற்படுவதாக கூறியதால் பெற்றோர் சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். சிறுமியை பரிசோதித்ததில் அவர் 4 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து தாம்பரம் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் தலைமையில் போலீசார் குரோம்பேட்டை அரசு மருத்துவமனை சென்று சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அதில், குன்றத்தூர் பகுதியை சேர்ந்த விக்னேஷ் ( 22) அதே பகுதியில் உள்ள பூ செடிகள் விற்பனை செய்து வந்துள்ளார்.

pocso

அப்போது பள்ளிக்கு செல்லும் சிறுமிடம் பேசி பழகி வந்துள்ளார். இந்த பழக்கம் பின்னர் காதலாக மாறியது. 6 மாதமாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இதற்கிடையில், கடந்த 5 மாதத்திற்கு முன்பு, சிறுமியை தனது பைக்கில் அழைத்துக் கொண்டு குன்றத்தூர் பகுதியில் சுற்றியுள்ளார்.

இதில் ஏற்பட்ட நெருக்கம் காரணமாக சிறுமியை யாரும் இல்லாத நேரத்தில் வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததில் சிறுமி 4 மாதம் கர்ப்பம் அடைந்தது தெரியவந்துள்ளது. விக்னேஷை கைது செய்த தாம்பரம் அனைத்து மகளிர் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.

newstm.in

Next Story
Share it