Theme Check

அதிர்ச்சி! டோல்கேட் ஊழியரை பம்பரில் தொங்கவிட்ட லாரி ஓட்டுநர்!! VIDEO

அதிர்ச்சி! டோல்கேட் ஊழியரை பம்பரில் தொங்கவிட்ட லாரி ஓட்டுநர்!! VIDEO

அதிர்ச்சி! டோல்கேட் ஊழியரை பம்பரில் தொங்கவிட்ட லாரி ஓட்டுநர்!! VIDEO
X

லாரி ஓட்டுநர் ஒருவர் டோல்கேட் ஊழியரை பம்பரில் நிற்க வைத்து 10 கிமீ தூரம் ஓட்டிச் சென்ற வீடியோ வெளியாகியுள்ளது.

ஆந்திர மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள அமக்கதாடு வழியாக சென்று கொண்டிருந்த ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த லாரி தேசிய நெடுஞ்சாலையில் டோல்கேட்டில் பணம் செலுத்தாமல் கடந்து சென்றது. இதனை கவனித்த டோல்கேட் ஊழியர் சீனிவாசலு பம்பர் மீது ஏறி அதனை நிறுத்த முயன்றார்.

lorry1

ஆனால் லாரி ஓட்டுநர் அந்த ஊழியரை பொருட்படுத்தாமல் லாரியை வேகமாக ஓட்டி சென்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த டோல்கேட்டில் பணியாற்றும் மற்ற ஊழியர்கள் தங்களுடைய மோட்டார் சைக்கிளில் அந்த லாரியை தொடர்ந்து சென்றனர்.

லாரி வேகமாக சென்று கொண்டிருந்ததால் உடனடியாக தேசிய நெடுஞ்சாலை ரோந்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்து விரைந்த போலீசார் லாரியை மடக்கி அந்த ஊழியரை மீட்டனர்.


லாரி டிரைவரை கைது செய்த போலீசார் அவரிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

newstm.in

Next Story
Share it