அதிர்ச்சி! பக்காவாக திட்டமிட்டு இளம்பெண்ணை கொன்ற குடும்பம்!!
அதிர்ச்சி! பக்காவாக திட்டமிட்டு இளம்பெண்ணை கொன்ற குடும்பம்!!

மதுரை மேலூரில் திருமணமான இளம்பெண் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கணவர் உட்பட உறவினர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொட்டப்பட்டி செல்லும் சாலையில் குன்றக்குடி ஆதின மடத்திற்கு சொந்தமான தென்னந்தோப்பில் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் உடல் பாதி எரிந்த நிலையில் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. போலீஸார் பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
அதில் அப்பெண் திண்டுக்கல் மாவட்டம் பஞ்சயம்பட்டியை சேர்ந்த அர்சுணன் மனைவி ராசாத்தி (18) என்பதும், இவர்களுக்கு திருமணமாகி ஒன்றரை வருடங்கள் ஆன நிலையில் 8 மாதத்தில் ஆண் குழந்தை உள்ளதும் தெரியவந்தது.

ராசாத்தியின் கணவர் அர்சுணனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அர்சுணனுக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி, இரண்டு மனைவிகளும் பிரிந்து சென்று விட்ட நிலையில், மூன்றாவதாக உறவினரின் மகளான ராசத்தியை திருமணம் செய்துள்ளார்.
இருவரும் தங்கள் குழந்தையுடன் சென்னையில் தங்கி இடியாப்ப கடை நடத்தி வந்தனர். அப்போது ராசத்திக்கு சிலருடன் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக சந்தேகித்து, அதனை கணவர் அர்சுணனன் கண்டித்ததாக தெரிகிறது.
மேலும் அர்ச்சுனன் தனது தந்தை ராசு, தாய் அரியம்மாள், உறவினர்கள் வல்லான் என்ற ரவி மற்றும் சிவலிங்கம் ஆகியோருக்கு தகவல் அளித்துவிட்டு ராசத்தியை ஊருக்கு அழைத்து வந்து கொலை செய்ய திட்டமிட்டதும் தெரிய வந்துள்ளது.

அதன்படி கடந்த 28ஆம் தேதி தென்னந்தோப்பிற்கு அழைத்துச் சென்று ராசத்தியை அர்ச்சுனன் கத்தியால் குத்தியுள்ளார். ராசாத்தி தடுத்த நிலையில், பாட்டிலால் மேற்கொண்டு குத்தியும், துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்து பனை ஓலைகளை வைத்து எரித்துவிட்டு தப்பிச் சென்றனர்.
இதனையடுத்து அர்சுணனன், அவரது பெற்றோர் ராசு, அரியம்மாள், உறவினர்களான வல்லான் என்ற ரவி மற்றும் சிவலிங்கம் ஆகிய 5 பேரை கொட்டாம்பட்டி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
newstm.in

