அதிர்ச்சி! தத்தெடுத்த பெண் குழந்தையை சீரழித்த குடும்பம்!!
அதிர்ச்சி! தத்தெடுத்த பெண் குழந்தையை சீரழித்த குடும்பம்!!

சென்னையில் தத்தெடுத்து வளர்த்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவல்லிகேணியை சேர்ந்த தம்பதி பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால் அவர்களது இரு மகள்களும் உறவினர்களிடம் வளர்ந்து வந்தனர். அப்போது, ஷெரிப் - ஜமீலா என்ற தம்பதி ஒரு வயது இளைய மகளை தத்தெடுத்து வளர்த்து வந்தனர்.
தற்போது அந்த பெண்ணுக்கு 17 வயதாகிறது. சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு 17 வயது சிறுமி, இனிமேல் அந்த வீட்டில் இருக்க முடியாது எனக்கூறி அக்காவிடம் வந்துவிட்டார்.

காரணம் குறித்து சிறுமியின் அக்கா கேட்டபோது அந்த சிறுமியோ தனக்கு நேர்ந்தவற்றை குறித்து கண்ணீர் மல்க விவரித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வளர்ப்பு தாய், தந்தையான ஷெரிப் - ஜமீலா தம்பதிக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.
அவர்கள் சிறுமியிடம் பகலில் சகோதரியாகவும் இரவில் தகாத முறையிலும் பழகி வந்துள்ளனர். பகல் நேரங்களில் அமைதியாக இருப்பவர்கள் இரவானதும் சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்துள்ளனர். 64 வயதான வளர்ப்பு தந்தை ஷெரீப்பும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரிந்தது.

சிறுமியின் சகோதரி இதுகுறித்து ராயப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் ஷெரீப், ஜமீலா மற்றும் அவர்களது மகன்களான இம்தியாஸ், இர்பான், அனீப் ஆகிய 5 பேர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்த போலீசார் அனீப்பை தவிர மற்ற நாக்கு பேரையும் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அனீப்பை தேடி வருகின்றனர்.
newstm.in

