Theme Check

அதிர்ச்சி! பைக் ரேஸால் பறிபோன பெண்ணின் உயிர்!!

அதிர்ச்சி! பைக் ரேஸால் பறிபோன பெண்ணின் உயிர்!!

அதிர்ச்சி! பைக் ரேஸால் பறிபோன பெண்ணின் உயிர்!!
X

சென்னையை அடுத்த முடிச்சூரை சேர்ந்த விஸ்வா என்பவர் தனது நண்பர்கள் ஐந்து பேருடன் சேர்ந்து தாம்பரம் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் பைக் ரேஸ் சென்றுள்ளார். அனைவரும் சாலையில் அசுர வேகத்தில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த 60 வயது மதிக்கத்தக்க பெண் மீது மோதியுள்ளனர். இதில் அப்பெண் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து அங்கு வந்த போலீஸார் அவரது உடலை உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

bike race death

அந்த பெண்ணிடம் இருந்து பையை சோதனை செய்தபோது, அதில் போலீஸார் கேண்டீன் கார்டு ஒன்று இருந்தது. அதில் ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் செல்வகுமாரி என குறிப்பிடப்பட்டிருந்தது.

எனவே விபத்தில் உயிரிழந்தது செல்வ குமாரியா, அல்லது வேறு யாராவதா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விபத்து ஏற்படுத்தி இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து பைக் ரேஸ் சென்ற இளைஞர்களிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it