அதிர்ச்சி! மாமுல் தர மறுத்த வியாபாரியை வெட்டிய போலீஸ்!!
அதிர்ச்சி! மாமுல் தர மறுத்த வியாபாரியை வெட்டிய போலீஸ்!!

மாமுல் தர மறுத்த சாலையோரப் பூக்கடை வியாபாரியை காவல் உதவி ஆய்வாளர் கத்தியால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தாம்பரம் சானடோரியம் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ்(50), கிழக்கு தாம்பரம் பாரதமாதா சாலையில் அமைந்துள்ள விநாயகர் கோயில் அருகில் பல வருடங்களாக பூக்கடை நடத்தி வருகிறார். பூக்கடை அருகே சேலையூர் காவல் நிலைய உதவி மையம் அமைந்துள்ளது.
இந்நிலையில் சேலையூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் பயிற்சி உதவி ஆய்வாளர் மணிவண்ணன் என்பவர் இந்த பகுதியில் கடை நடத்த தினமும் மாமூல் 200ரூபாய் தரவேண்டுமென கூறியுள்ளார். அதற்கு வெங்கடேசன் தனது கஷ்டத்தை கூறி அழுதுள்ளார்.

இதையடுத்து மறுநாள் அங்குசென்ற மணிவண்ணன் பூக்கடையை அடித்து நொறுக்கி விற்பனைக்காக வைத்திருந்த பூக்களை சாலையில் வீசியுள்ளார். அப்போது தடுக்க முயன்ற வெங்கடேஷை, இருசக்கர வாகனத்தின் சாவியில் வைத்திருந்த சிறிய கத்தியால் வெட்டி உள்ளார்.
வெங்கடேசன் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு முகத்தில் 35 தையல்கள் போடப்பட்டது. இது குறித்த புகாரில் பயிற்சி உதவி ஆய்வாளர் மணிவண்ணனை தற்காலிக பணிநீக்கம் செய்து தாம்பரம் காவல் ஆணையர் ரவி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இனி காவலர்கள் வியாபாரிகளிடம் மாமூல் கேட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
newstm.in

