அதிர்ச்சி! தெருவில் செல்வோரை விரட்டி விரட்டி கடித்த வெறிநாய்!!
அதிர்ச்சி! தெருவில் செல்வோரை விரட்டி விரட்டி கடித்த வெறிநாய்!!

சேலம் மாவட்டம் அருகே வெறிநாய் கடித்ததில் பத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், மூன்று சிறுவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வீரக்கல் புதூர் மற்றும் பி.என்.பட்டி பேரூராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் வெறிநாய் ஒன்று தெருவில் செல்வோரை துரத்தி துரித்த கடித்தது. அதில் பத்துக்கும் மேற்பட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதில் 3 சிறுவர்கள் கடுமையான காயங்களுடன் குன்னூரில் உள்ள வெறிநாய் கடிக்கான மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் மருத்துவமனையில் ஊசி போட்டுக் கொண்டு வீட்டிற்குச் சென்று விட்டதாக தெரிகிறது.

வெறிநாய் தொல்லையால் வீட்டை விட்டு வெளியே வர பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து பொதுமக்களையும், சிறார்களையும் வெறிபிடித்த நாயிடமிருந்து காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
newstm.in

