Theme Check

அதிர்ச்சி! திருமணத்தில் கீழே விழுந்த மாப்பிள்ளையின் ‘விக்’!!

அதிர்ச்சி! திருமணத்தில் கீழே விழுந்த மாப்பிள்ளையின் ‘விக்’!!

அதிர்ச்சி! திருமணத்தில் கீழே விழுந்த மாப்பிள்ளையின் ‘விக்’!!
X

உத்தரப்பிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞருக்குத் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இதையடுத்து திருமண நிச்சயித்த தேதியில் மணமகனின் குடும்பத்தினர் ஊர்வலமாக திருமணம் நடக்கும் இடத்திற்குச் சென்றனர்.

அப்போது, ஊர்வலத்தில் வந்த மாப்பிள்ளை மயங்கி விழுந்தார். அவர் கீழே விழுந்தவுடன் அவர் வழுக்கை தலையை மறைப்பதற்காக வைத்திருந்த விக்கும் கழன்றி விழுந்தது. இதனால் மாப்பிள்ளை வழுக்கை தலை என்ற உண்மை பெண்ணின் குடும்பத்தாருக்கும், மணப் பெண்ணுக்கும் தெரியவந்தது.

up wig

இந்த உண்மை தெரிந்த, மணப்பெண் வழுக்கை தலையுள்ளவரைத் திருமணம் செய்து கொள்ள முடியாது என தெரிவித்தார். அவரது பெற்றோர்கள் எவ்வளவு சமாதானம் செய்து அவர் தனது முடிவில் உறுதியாக இருந்தார்.

இதனால் நடக்க விருந்த திருமணம் இறுதியில் நின்றுபோனது. இதையடுத்து மாப்பிள்ளை வீட்டால் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர். முன்பே மணமகனின் வழுக்கை பற்றி தெரிவித்திருந்தால், மனதளவில் பெண்ணை தயார் செய்திருப்போம், ஆனால் அவர்கள் அதை மறைத்தது நம்பிக்கையை இழக்கவைத்துவிட்டது என்று பெண்ணின் உறவினர்கள் தெரிவித்தனர்.

newstm.in

Next Story
Share it