Theme Check

அதிர்ச்சி! பிறந்த குழந்தையை சாக்கடையில் வீசிச் சென்ற பெண்!!

அதிர்ச்சி! பிறந்த குழந்தையை சாக்கடையில் வீசிச் சென்ற பெண்!!

அதிர்ச்சி! பிறந்த குழந்தையை சாக்கடையில் வீசிச் சென்ற பெண்!!
X

தஞ்சை அருகே பிறந்த ஆண் குழந்தையை சாக்கடையில் பெண் ஒருவர் வீசிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேல அலங்கம் பகுதியில் தூய்மைப் பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பிறந்து சிலமணி நேரமே ஆன ஆண் குழந்தை ஒன்று தொப்புள் கொடியுடன் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு வந்த தஞ்சை மேற்கு காவல் நிலைய காவலர்கள் குழந்தையின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

tnj

பின்னர் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது பெண்மணி ஒருவர் அக்குழந்தையை கொண்டு வந்து சாக்கடையில் வீசும் காட்சிகள் உள்ளது. குழந்தையை சாக்கடையில் போட்டுவிட்டு, கட்டையால் வைத்து அப்பெண்மணி அமுக்கியுள்ளார்.

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல் துறையினர் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Next Story
Share it