அதிர்ச்சி! குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண் உயிரிழப்பு!!
அதிர்ச்சி! குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண் உயிரிழப்பு!!

சென்னை போரூரில் கருத்தடை சிகிச்சை செய்துகொண்ட பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாங்காடு பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சதீஷ்குமார் – வினோதினி தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் கருத்தடை ஆபரேஷன் செய்வதற்காக போரூரில் உள்ள நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனையில் வினோதினி அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு கடந்த திங்கள் கிழமை கருத்தடை ஆபரேஷன் செய்யப்பட்டது. இரண்டு நாட்கள் கழித்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் அவருக்கு வயிற்றுவலி ஏற்பட்டதால் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்றார். அதன்பிறகு வினோதினி உயிரிழந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் தவறான சிகிச்சையால் வினோதினி இறந்து விட்டதாக போரூரில் உள்ள நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், வினோதினியின் இறப்பு குறித்து விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார். அதன்பிறகு சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
newstm.in

