Theme Check

அதிர்ச்சி! யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த இளைஞர்கள்!!

அதிர்ச்சி! யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த இளைஞர்கள்!!

அதிர்ச்சி! யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த இளைஞர்கள்!!
X

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சேலத்தில் இருந்து இரண்டு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் வந்தனர். அவர்களை பிடித்து விசாரணை செய்தனர்.

அப்போது இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதால் சந்தேகமடைந்த போலீஸார் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்த போது. அதில் ஒரு கைத்துப்பாக்கி, ஒரு பெரிய துப்பாக்கி இருந்தது தெரியவந்தது.

அதே போல் பாதி செய்த நிலையில் பெரிய துப்பாக்கி, துப்பாக்கி செய்வதற்கான உதிரிபாகங்கள் முகமூடிகள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

gun making

உடனடியாக அவர்கள் இருவரையும் கைது செய்து ஓமலூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்தனர். அதில் அவர்கள் எருமாபாளையம் பகுதியை சேர்ந்த நவீன் சக்கரவர்த்தி (25), சஞ்சய் பிரகாஷ் (25) என தெரியவந்தது.

தாங்கள் ரு இயற்கை ஆர்வலர்கள் என்றும், பறவைகளை பாதுகாப்பதற்காகவும் பொது மக்களை பாதுகாக்கவும் யூடியூப் சேனல் மூலம் துப்பாக்கி செய்வது எப்படி என கண்டறிந்து துப்பாக்கிகளை செய்ததாக கூறினர். இதைத் தொடர்ந்து துப்பாக்கிகள், துப்பாக்கி செய்யும் உதிரிபாகங்கள், முகமூடிகள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

gun making

மேலும் ஆயுத தடைச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சஞ்சய் பிரகாஷ் பொறியியல் பட்டதாரி எனவும் நவீன் சக்கரவர்த்தி பி.சி. படித்து உள்ளதும் தெரியவந்துள்ளது.

newstm.in

Next Story
Share it