அதிர்ச்சி! ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை!!
அதிர்ச்சி! ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை!!

கும்பகோணம் அருகே ரயில்முன் பாய்ந்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொள்ளும் வீடியோ சமூக வளைதலங்களில் வேகமாக பரவி வருகிறது.
தாராசும் ரயில் நிலையத்தில், திருச்சியில் இருந்து மயிலாடுத்துறை சென்ற ரயிலில் இளைஞர் ஒருவர் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து அங்கு வந்த ரயில்வே போலீஸார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரனையில் தற்கொலை செய்து கொண்ட இளைஞர், அரித்துவாரமங்கலம் திரௌபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாஸ்கரன்-தேவி தம்பதியினர் மகன் முத்துகுமரன் (24) என்பது தெரியவந்தது.

இவர் கும்பகோணத்தில் உள்ளதனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் முத்துகுமரன் மனஅழுத்ததால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
மனஅழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் முத்துகுமரன் தற்கொலை செய்து கொள்ளும் வீடியோ சமூக வளைதலங்களில் வேகமாக பரவி வருகிறது.
newstm.in

