அதிர்ச்சி! அரசு நிலத்தில் கஞ்சா பயிரிட்ட இளைஞர்!!
அதிர்ச்சி! அரசு நிலத்தில் கஞ்சா பயிரிட்ட இளைஞர்!!

கொடைக்கானல் அருகே அரசு நிலத்தில் கஞ்சா செடிகள் பயிரிட்ட இளைஞரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பூம்பாறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கொடைக்கானல் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் அப்பகுதியில் காவல்துறை தனிப்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அரசு வருவாய் நிலத்தில் கஞ்சா செடிகள் பயிரிட்டு இருந்ததை கண்டறிந்தனர். அங்கு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ஒரு இளைஞர் நின்று கொண்டிருந்தார்.

அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டவதில் அவர், பூம்பாறை வயல் பகுதியை சேர்ந்த திவாகர் (28) என்று தெரியவந்தது. அவர்களின் தேவைக்காகவும், பணம் சம்பாதிக்கவும் கஞ்சா செடிகள் பயிரிட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து அந்த இளைஞரை கொடைக்கானல் காவல் துறையினர் கைது செய்து பயிரிட்டு இருந்த அனைத்து கஞ்சா செடிகளையும் அழித்தனர். விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கஞ்சாவையும் தனி படையினர் பறிமுதல் செய்தனர். மேலும் அவரது சகோதர் ஸ்ரீதரன் என்ற இளைஞரையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
newstm.in

