அதிர்ச்சி..!! மத்திய பாதுகாப்பு படைவீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!
அதிர்ச்சி..!! மத்திய பாதுகாப்பு படைவீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!

சென்னை விமான நிலையத்தில் ராஜஸ்தான் மாநிலத்தை சோ்ந்த யஸ்பால் (வயது 26) என்பவர் பாதுகாப்பு பணியில் இருந்தார். இவா் 2017-ம் ஆண்டில் பணியில் சோ்ந்தவா். யஸ்பால் கடந்த சில காலமாக சென்னை விமான நிலைய பாதுகாப்பு பணியில் இருந்தாா்.
இந்நிலையில் இன்று காலை சென்னை சா்வதேச விமான நிலையம் புறப்பாடு பகுதியில் பணியிலிருந்தாா். அப்போது விமான நிலைய கழிப்பறைக்குள் சென்றவா், திடீரென தனது கைத் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தாா்.
துப்பாக்கி குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டு, விமானநிலைய தூய்மை பணியாளா் ஒருவா் ஓடிச்சென்று பாா்த்தபோது, மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரா் உயிரிழந்து தெரியவந்தது. உடனடியாக விமான நிலைய அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள், விமான நிலைய போலீசாா் விரைந்து வந்து விசாரணை நடத்துகின்றனா்.
Next Story

