Theme Check

ஷாக் நியூஸ்! பால் விலை அதிரடி உயர்வு!!

ஷாக் நியூஸ்! பால் விலை அதிரடி உயர்வு!!

ஷாக் நியூஸ்! பால் விலை அதிரடி உயர்வு!!
X

இன்று முதல் பால் விலை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்படுவதாக அமுல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

விலைவாசி உயர்வு மக்களை கடுமையாக பாதித்து வருகிறது. சம்பளத்தைவிட செலவு அதிகமாவதாக பொதுமக்கள் வேதனையுடன் கூறும் வேளையில், அடுத்த அதிர்ச்சியாக பால் விலை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

விலை ஏற்றம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக அமுல் நிறுவனம் தெரிவித்துள்ளது. அமுல் பிராண்டின் கோல்டு, டாஸா, சக்தி, டி-ஸ்பெஷன்ல் உள்ளிட்ட பால் வகைகளின் விலை உயர்ந்துள்ளது. பசும்பால், எருமைப் பால் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.

milk 1

விலையேற்றத்துக்குப் பிறகு, 500 மில்லி லிட்டர் அமுல் கோல்டு பால் விலை ரூ.30 ஆக உயரும். அதேபோல, அமுல் டாஸா பால் விலை ரூ.24 ஆகவும், அமுல் சக்தி பால் விலை ரூ.27 ஆகவும் இருக்கும். அமுல் நிறுவனம் கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் பால் விலையை உயர்த்தியிருந்தது.

2021 ஜூலை மாதத்தில் பால் விலை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் 2 ரூபாய் உயர்ந்துள்ளது. இந்த விலையேற்றத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றாலும், பால் உற்பத்தியாளர்களுக்கு இது வெகுவாகப் பயனளிக்கும்.

amul2

அமுல் நிறுவனத்தின் கொள்கைப்படி, பாலுக்காக பொதுமக்கள் செலவிடும் ஒரு ரூபாயில் சுமார் 80 பைசாவை பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்குவதே நோக்கமாகும். அதன்படி, இந்த விலையேற்றம் பால் உற்பத்தியாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Next Story
Share it