அதிர்ச்சியும் சோகமும்.. வகுப்பறையில் மயங்கி விழுந்த மாணவி உயிரிழப்பு !!
அதிர்ச்சியும் சோகமும்.. வகுப்பறையில் மயங்கி விழுந்த மாணவி உயிரிழப்பு !!

தனியார் கல்லூரியின் வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்த மாணவி உயிரிழந்ததால் பேராசிரியர்கள், சக மாணவ, மாணவிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கீரிப்பட்டி பகுதியை சேர்ந்த பழனிசாமி - லட்சுமி தம்பதியின் 19 வயது மகள் தலைவாசல் அருகே உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். வழக்கம் போல் கல்லூரிக்கு சென்ற மாணவி வகுப்பறையில் இருந்தப்போது திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
இதனைபார்த்து அதிர்ச்சி அடைந்த சக மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடம் கூறினர். பின்னர் கல்லூரி நிர்வாகம் மாணவியை மீட்டு தலைவாசலில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல்சிசிச்சைக்காக ஆத்தூர் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவறிந்த தலைவாசல் போலீசார் மாணவியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கல்லூரி ஆசிரியர்கள் ஏதாவது கண்டித்தார்களா? இல்லை உயிரிழப்புக்கு வேறு ஏதும் காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கல்லூரிக்கு சென்ற மாணவி வகுப்பறையில் மயங்கி விழுந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சக மாணவிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in

