Theme Check

சென்னையில் அதிர்ச்சி.. 2-ம் வகுப்பு மாணவன் உயிரைப் பறித்தது பாட புத்தகம்..!

சென்னையில் அதிர்ச்சி.. 2-ம் வகுப்பு மாணவன் உயிரைப் பறித்தது பாட புத்தகம்..!

சென்னையில் அதிர்ச்சி.. 2-ம் வகுப்பு மாணவன் உயிரைப் பறித்தது பாட புத்தகம்..!
X

சென்னை விருகம்பாக்கம் இளங்கோ நகரைச் சேர்ந்தவர் வெற்றிவேல். இவர் பெங்களூரில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இவருடைய மகன் தீக்சித் (7). இவர், வளசரவாக்கம் அருகே உள்ள ஸ்ரீ வெங்கடேஷ்வரா மெட்ரிக் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், இன்று (28-ம் தேதி) காலை வழக்கம் போல் பள்ளி வாகனத்தில் பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது, பள்ளி மைதானத்தில் வாகனத்தில் இருந்து இறங்கிய தீக்சித், பாட புத்தகத்தை வாகனத்தில் மறந்து சென்றுள்ளார்.

இதையடுத்து அவர், புத்தகத்தை எடுக்க மீண்டும் வாகனத்தில் ஏறியுள்ளார். இதனையறியாத ஓட்டுநர், வாகனத்தை திடீரென எடுத்தபோது தீக்சித் தவறி கீழே விழுந்துள்ளார். அப்போது, வாகனத்தின் சக்கரம் தீக்சித் மீது ஏறி இறங்கியதில் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து தகவலறிந்த வளசரவாக்கம் காவல் துறையினர் விரைந்து சென்று, மாணவனின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், வாகன ஓட்டுநரான முகலிவாக்கம் பகுதியைச் சேர்ந்த பூங்காவனம் (64) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பள்ளிக்கல்வி துறையின் மாவட்ட அலுவலரும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story
Share it