Theme Check

தமிழகத்தில் அதிர்ச்சி.. ஓடும் பேருந்தில் நடத்துநர் அடித்துக்கொலை !!

தமிழகத்தில் அதிர்ச்சி.. ஓடும் பேருந்தில் நடத்துநர் அடித்துக்கொலை !!

தமிழகத்தில் அதிர்ச்சி.. ஓடும் பேருந்தில் நடத்துநர் அடித்துக்கொலை !!
X

விழுப்புரம் நோக்கி சென்ற அரசு பேருந்தில் பயணி ஒருவர் நடத்துநரை அடித்துகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையிலிருந்து விழுப்புரம் நோக்கி பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. அந்த பேருந்தில் பயணித்த பயணி ஒருவருக்கும் நடத்துநருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது அந்த பயணி கடும் மதுபோதையில் இருந்துள்ளார்.

அந்த தகராறில் போதையிலிருந்த பயணி திடீரென அரசு பேருந்து நடத்துனர் பெருமாளை தாக்கியுள்ளார். இதில் பேருந்தில் மயங்கி விழுந்த நடத்துநர் பெருமாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

sdf

பேருந்து செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே வந்து கொண்டிருந்தபோது இந்த தகராறு ஏற்பட்டதாகவும் இதில் நடத்துநர் அடித்து கொல்லப்பட்டதும் தெரியவந்துள்ளது. உயிரிழந்த நடத்துநர் பெருமாள் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் என்பதும், விழுப்புரம் பணிமனையில் பணியாற்றி வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

பின்னர் பேருந்தை நிறுத்தி அந்நபரை பிடிக்க முயன்றபோது தப்பியோடினார். அங்கு சென்ற காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நடத்துநரை அடித்துக்கொன்று விட்டு பேருந்தில் இருந்து தப்பி ஓடிய போதை பயணியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in


Next Story
Share it