Theme Check

ஆவடி அருகே அதிர்ச்சி.. விஷவாயு தாக்கி 3 பேர் பலி..!

ஆவடி அருகே அதிர்ச்சி.. விஷவாயு தாக்கி 3 பேர் பலி..!

ஆவடி அருகே அதிர்ச்சி.. விஷவாயு தாக்கி 3 பேர் பலி..!
X

சென்னை ஆவடி அருகே உள்ள திருமுல்லைவாயல் சிவசக்தி நகரில், குடியிருப்பாளர் ஒருவர் வீட்டின் தரைத்தளத்தில் இருந்த தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ய முன்வந்துள்ளார். அதற்காக, சம்பின் மூடியை திறந்து உள்ளே சென்று சுத்தம் செய்ய முயன்றுள்ளார்.

அப்போது, சம்பில் இருந்து வெளியேறிய விஷவாயு தாக்கி அவர் மயங்கி விழுந்த நிலையில், அவரை காப்பாற்ற முயன்ற அவரது மகன் மற்றும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த அவரது உறவினர் உட்பட 3 பேர் பலியாகினர். மற்றொருவர் உயிருக்கு போராடிய நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினர் அவர்களை மீட்டனர். விஷவாயு தாக்கியதில் வீட்டின் உரிமையாளர் பிரமோத், பிரேம்குமார், தந்தை பிரதீப் குமார் ஆகியோர் உயிரிழந்ததாகவும், உயிருக்கு போராடிய சாருநாதன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

விஷவாயு தாக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story
Share it