Theme Check

அதிர்ச்சி சம்பவம்.. கன்டெய்னர் லாரியில் இருந்து 40 உடல்கள் மீட்பு..!

அதிர்ச்சி சம்பவம்.. கன்டெய்னர் லாரியில் இருந்து 40 உடல்கள் மீட்பு..!

அதிர்ச்சி சம்பவம்.. கன்டெய்னர் லாரியில் இருந்து 40 உடல்கள் மீட்பு..!
X

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் சான் அன்டோனியோ நகரின் புறநகர் பகுதியில் உள்ள தண்டவாளம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் கன்டெய்னர் லாரி ஒன்று நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார், அந்த லாரியின் கன்டெய்னரை திறந்து பார்த்தனர். அப்போது, அந்த கன்டெய்னருக்குள் 56 பேர் மயக்க நிலையில் இருந்ததைக் கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக மருத்துவத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மருத்துவர்கள் வந்து அங்கிருந்தவர்களை பரிசோதனை செய்ததில், 40 பேர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.

மேலும், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 16 பேர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் போலீசார் இதுகுறித்து கூறுகையில், ‘இவர்கள், மெக்சிகோவில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேற கண்டெய்னர் லாரியில் வந்திருக்கலாம்.

டெக்சாஸ் நகருக்கு வந்த பின்னர், வேறு எங்கு செல்வது என தெரியாமல் லாரியை ஒதுக்குப்புறமான இடத்தில் நிறுத்திவிட்டு டிரைவர் தப்பிச் சென்றுள்ளார்.

இதனால், கன்டெய்னரில் இருந்த அகதிகள் அதிக வெப்பம் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்திருக்கலாம்’ எனத் தெரிவித்தனர்.

Next Story
Share it