Theme Check

நடுவானில் அதிர்ச்சி சம்பவம்... மயக்கமடைந்த பயணிகள்!!

நடுவானில் அதிர்ச்சி சம்பவம்... மயக்கமடைந்த பயணிகள்!!

நடுவானில் அதிர்ச்சி சம்பவம்... மயக்கமடைந்த பயணிகள்!!
X

உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் இருந்து மும்பைக்கு கோ ஃபர்ஸ்ட் நிறுவனத்தின் விமானம் சென்று கொண்டிருந்த போது நடுவழியில் அந்த விமானத்தில் ஏசி வேலை செய்யாமல் போனது.

இதனால் பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். போதிய காற்று அங்கு இல்லாததால் சிலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. மேலும் 3 பயணிகள் மயங்கி விழுந்தனர்.

இது தொடர்பான வீடியோவை அந்த விமானத்தில் பயணம் செய்த பெண் ஒருவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ஏசி வேலை செய்யவில்லை என்றால் விமான நிறுவனங்கள் விமானத்தை இயக்கியிருக்கவே கூடாது என குறிப்பிட்டுள்ளார்.


இது ஒட்டுமொத்த அமைப்பின் அவமானம். விமானத்தில் ஒரு கேன்சர் நோயாளி பாதிக்கப்பட்டிருக்கிறார் என கூறினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

நடுவானில் விமானம் இது போன்ற துயர நிலையை சந்தித்ததற்கு பல்வேறு தரப்பினரும் வருத்தம் தெரிவித்துள்ளனர். மேலும் பலரும் கோ ஃபர்ஸ்ட் நிறுவனத்தின் பொறுப்பற்ற செயலை விமர்சித்துள்ளனர்.

newstm.in

Next Story
Share it