அதிர்ச்சி தகவல்! இந்த 5 மாவட்டங்களில் அதிகரித்துள்ள கொரோனா!!
அதிர்ச்சி தகவல்! இந்த 5 மாவட்டங்களில் அதிகரித்துள்ள கொரோனா!!

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியாவில் 40 சதவீதம் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது என்றும், கேரளா, மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்களில் தொற்று அதிகரித்து வருகிறது எனவும் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதத்தில் தொற்று குறைவாக இருந்த நிலையில், தற்போது சற்று அதிகரித்து காணப்படுகிறது. தமிழகத்தில் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை 195 என பதிவாகி உள்ளது. மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் குறைவாகவே உள்ளது.

பிஏ4, பிஏ5 வகை உறுமாறிய கொகரோனா தொற்று புதிதாக பதிவாவது, 5ஆவது அலை தொடங்கியது என்பதனை காட்டுகிறது. தமிழகத்தில் நோய் தொற்று அதிகரித்து வருகிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அனைவரும் பரிசோதனை செய்து கொள்ளுங்கள், முகக்கவசம் அவசியம் என்றார்.
தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் கோவை ஆகிய 5 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை அதிகரிக்காமல் கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும், அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
newstm.in

