Theme Check

அதிர்ச்சி தகவல்! தமிழகத்தில் 2ஆவது டோஸ் தடுப்பூசி செலுத்தாத ஒரு கோடி பேர்!!

அதிர்ச்சி தகவல்! தமிழகத்தில் 2ஆவது டோஸ் தடுப்பூசி செலுத்தாத ஒரு கோடி பேர்!!

அதிர்ச்சி தகவல்! தமிழகத்தில் 2ஆவது டோஸ் தடுப்பூசி செலுத்தாத ஒரு கோடி பேர்!!
X

தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றும் பழக்கம் மக்களிடையே குறைந்து வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு நடத்தினார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர், படிப்படியாக கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக தெரிவித்தார்.

மக்கள் கவனக்குறைவாக இருந்தால் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்கும் என எச்சரித்த அவர், பொதுமக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கூறினார். மேலும், ராணிபேட்டை, கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் தொற்று உறுதியாகும் சதவீதம் 10 விழுக்காடாக உள்ளது என்றார்.

vaccine

மற்ற மாவட்டங்களில் தொற்று பாதிப்பு விகிதம் குறைந்து இருந்தாலும், கேரள எல்லையான கோவை, தேனி, திருப்பூர் மாவட்டங்களில், ஆந்திரா எல்லையான திருவள்ளூர் மாவட்டம் மற்றும் சுற்றுலா தளம் உள்ள மாவட்டங்களான நீலகிரி போன்ற மாவட்டங்களிலும் தனி கவனம் செலுத்தப்பட்டு வருவதாக கூறினார்.

மொத்தமாக, தமிழகத்தில் பாதிக்கப்பட்ட தொற்றாளர்களில் 4% விழுக்காடு மட்டுமே மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறிய அவர், கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால், பொதுமக்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவதை குறைக்க தொடங்கி உள்ளதாக கூறினார்.

radhakrishnan

கொரோனா பாதிப்பில் இருந்து தங்களை காத்து கொள்ள கட்டாயம் முககவசம் அணிந்து தங்களுடைய ஒத்துழைப்பை மக்கள் அளிக்க வேண்டும் என்று கூறினார். அதுமட்டுமின்றி ஜனவரியில் பூஸ்டர் டோஸ் செலுத்த தகுதியானவர்கள் 7.5 லட்சம் பேரில் தற்போது 4 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு தமிழகத்தில் பூஸ்டர் செலுத்தப்பட்டுள்ளது என்றார்.

இரண்டாம் தவனை தடுப்பூசி செலுத்தாதவர்கள் 1.06 கோடி பேர் உள்ளது வேதனை அளிக்கிறது. இதனால், தடுப்பூசி செலுத்தாதவர்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என கூறினார்.

newstm.in

Next Story
Share it