Theme Check

அதிர்ச்சி தகவல்.. ஹெல்மெட் அணியாததால் 10 லட்சம் பேர் விபத்தில் உயிரிழப்பு !!

அதிர்ச்சி தகவல்.. ஹெல்மெட் அணியாததால் 10 லட்சம் பேர் விபத்தில் உயிரிழப்பு !!

அதிர்ச்சி தகவல்.. ஹெல்மெட் அணியாததால் 10 லட்சம் பேர் விபத்தில் உயிரிழப்பு !!
X

உலக தலைக்காய தினத்தை முன்னிட்டு மதுரையில் விழிப்புணர்வு டூவீலர் பேரணியை போக்குவரத்து துணை கமிஷனர் ஆறுமுகசாமி துவக்கி வைத்தார்.

மீனாட்சி மிஷன் மருத்துவமனை சார்பில் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இருந்து துவங்கிய டூவீலர் பேரணியில் ஹெல்மெட் அணிந்து பங்கேற்றனர். அப்போது தலைக்காயம் மீதான விழிப்புணா்வு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளோடு, தலைக்கவசங்களை அணிந்து 100-க்கும் அதிகமானோா் இருசக்கர வாகனத்தில் சென்றனா். இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த டாக்டர் செல்வமுத்துக்குமரன் கூறுகையில், டூவீலர் ஓட்டுவோர்பெரும்பாலும் ஹெல்மெட் அணிவது இல்லை. அதை ஒரு பொருட்டாக நினைப்பது இல்லை.

helmat

இந்தியாவில் சராசரியாக ஒவ்வொரு 3 நிமிடங்களுக்கும் ஒரு நபா் தலைக்காயத்தின் காரணமாக உயிரிழக்கிறாா் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் உலகஅளவில் 10 லட்சம் பேர் விபத்தில் சிக்கி தலைக் காயங்களுடன் இறக்கின்றனர். இதை தவிர்க்க ஹெல்மெட் அணிவது, 'சீட்' பெல்ட் அணிவது அவசியம். மேலும் 10 லட்சம் நபா்களுக்கு மறுவாழ்வு சிகிச்சைகள் அவசியமாக இருக்கின்றன. எனவே, விபத்து சாா்ந்த தலைக்காயங்கள் பற்றி பொதுமக்களுக்கு கற்பிப்பதற்காக உலக தலைக்காய விழிப்புணா்வு தினம் அனுசரிக்கப்படுகிறது என்றாா்.

newstm.in

Next Story
Share it