Theme Check

குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!
X

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் சில்லறை மதுபான கடைகளின் இணைப்பில் உள்ள பார்களில், தின்பண்டங்கள் விற்பனை, காலி பாட்டில்களை சேகரிப்பதற்கான புது டெண்டர் அறிவிப்பை டாஸ்மாக் நிறுவனம் அறிவித்தது.

இந்த டெண்டரில் முறைகேடுகள் நடந்து இருப்பதாக பார் உரிமையாளர்கள் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து விளக்கம் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, “டாஸ்மாக் பார்களுக்கான டெண்டர்கள் வெளிப்படைத் தன்மையுடன் வெளியிடப்பட்டுள்ளன. அதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை” என்று தெரிவித்திருந்தார்.
டாஸ்மாக் கடை திறப்பு விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு  மேல்முறையீடு | Tamil Nadu government appeals to Supreme Court to open the  tasmac | Puthiyathalaimurai ...
இந்நிலையில் பார் உரிமையாளர்கள், டெண்டரில் முறைகேடுகள் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இவ்வழக்கு நீதிபதி சி.சரவணன் முன்னிலையில் நடைபெற்றது.

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை விற்பதற்கு மட்டுமே அனுமதி.

பார்களை இணைத்து நடத்த சட்டத்தில் இடம் இல்லை என்று கூறி, தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளின் பார்களை 6 மாதத்திற்குள் மூட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Next Story
Share it