Theme Check

அதிர்ச்சி வீடியோ! 12ஆவது மாடி பால்கனியில் தொங்கியபடி உடற்பயிற்சி செய்யும் நபர்!!

அதிர்ச்சி வீடியோ! 12ஆவது மாடி பால்கனியில் தொங்கியபடி உடற்பயிற்சி செய்யும் நபர்!!

அதிர்ச்சி வீடியோ! 12ஆவது மாடி பால்கனியில் தொங்கியபடி உடற்பயிற்சி செய்யும் நபர்!!
X

பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் 12ஆவது மாடியில் பால்கனியில் வெளிப்புறம் நின்று கம்பியை பிடித்தபடி ஒருவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோ பார்த்தாலே பயத்தை ஏற்படுத்துவது போல் உள்ளது.

அண்மையில் பரிதாபாத்தில் தாய் ஒருவர், தனது மகனை புடவையைகட்டி கீழ் வீட்டு பால்கனிக்கு இறக்கிய வீடியோ ஏற்படுத்திய அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் அடுத்து ஒரு அதிர்ச்சியை இந்த வீடியோ ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிகழ்வு நடந்திருப்பதும் ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில்தான். அதில் 12ஆவது மாடியில் உள்ள தனது வீட்டின் பால்கனியில் வெளிப்புறம் நின்று கொண்டு கம்பியை பிடித்தவாறு அவர் உடற்பயிற்சி மேற்கொள்கிறார்.

அதனை எதிரே இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து ஒருவர் வீடியோ பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ பார்ப்பதற்கே பதைபதைப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.

newstm.in

Next Story
Share it