Theme Check

வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு – 4 பேர் உயிரிழப்பு!!

வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு – 4 பேர் உயிரிழப்பு!!

வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு – 4 பேர் உயிரிழப்பு!!
X

அமெரிக்காவிலுள்ள வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர்.

இண்டியானா மாகாணத்தில் கிரீன்வுட் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் உணவு விடுதிகள் அமைந்த பகுதியில் துப்பாக்கியுடன் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினார்.

இந்த சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து, சத்தம் கேட்டு அந்த பகுதிக்கு வந்த மற்றொரு நபர், சம்பவம் பற்றி அறிந்தவுடன் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து மர்ம நபரை நோக்கி சுட்டார். இதில், மர்ம நபர் உயிரிழந்தார்.

usa shooting

இதனை கிரீன்வுட் காவல் துறையினர் உறுதிப்படுத்தி உள்ளனர். கிரீன்வுட் பார்க் வணிக வளாகத்தில் பெரிய அளவில் துப்பாக்கி சூடு நடந்துள்ளதாக மேயர் தெரிவித்துள்ளார்.

காவல் துறையினர் சம்பவ பகுதிக்கு சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வேறு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும், அதே நேரத்தில் பொதுமக்கள் விலகி இருக்கும்படி கிரீன்வுட் மேயர் கேட்டுக் கொண்டுள்ளார்.

newstm.in

Next Story
Share it