Theme Check

போதையில் பெண்ணிடம் சில்மிஷம்… இளைஞருக்கு தர்ம அடி!!

போதையில் பெண்ணிடம் சில்மிஷம்… இளைஞருக்கு தர்ம அடி!!

போதையில் பெண்ணிடம் சில்மிஷம்… இளைஞருக்கு தர்ம அடி!!
X

ஈரோட்டில் இளம்பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்ட இளைஞருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.

பன்னீர் செல்வம் பூங்கா அருகே சாலையில் சென்ற இளம்பெண் ஒருவரிடம், இளைஞர் ஒருவர் மது போதையில் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்ணை அந்த இளைஞர் தாக்கி உள்ளார்.

இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அந்த இளைஞரை சுற்றி வளைத்து, சரமாரியாக தாக்கினர். பெண்கள் சிலர் ஆவேசத்துடன் இளைஞரை காலணியால் அடித்தனர். பின்னர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

erd

அதனைத் தொடர்ந்து அங்கு வந்த நகர காவல்துறையினரிடம் அந்த இளைஞரை ஒப்படைத்தனர். போலீசாரின் விசாரணையில் அந்த நபர், கருங்கல்பாளையத்தை சேர்ந்த பாலமுருகன் என்பதும், மாட்டு வண்டி தொழிலாளி என்பதும் தெரியவந்தது.

சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு பொதுமக்களிடம் தர்ம அடி வாங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Next Story
Share it