Theme Check

தனுஷின் ‘நானே வருவேன்’: வெளியானது புதிய போஸ்டர்..!

தனுஷின் ‘நானே வருவேன்’: வெளியானது புதிய போஸ்டர்..!

தனுஷின் ‘நானே வருவேன்’: வெளியானது புதிய போஸ்டர்..!
X

செல்வராகவன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘நானே வருவேன்’. இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக இந்துஜா நடித்து வருகிறார்.

இயக்குனர் செல்வராகவனும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்த படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கிறார். இதற்கு முன்பு தனுஷ் - செல்வராகவன் - யுவன் ஷங்கர் ராஜா கூட்டணியில் வெளியான ‘துள்ளுவதோ இளமை’, ‘காதல்கொண்டேன்’, ‘புதுப்பேட்டை’ ஆகிய படங்கள் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பை பெற்றது.

இந்த படங்களை தொடர்ந்து தற்போது, ‘நானே வருவேன்’ படத்தில் இந்த கூட்டணி இணைந்துள்ளதால் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு மிக அதிகமாக உள்ளது.

இந்நிலையில், நீண்ட நாட்களாக இந்த படத்தின் அப்டேட் எப்போது வெளியாகும் எனக் காத்திருந்த ரசிகர்களுக்கு செல்வராகவன் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.




செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘நானே வருவேன்’ படத்திற்கான போஸ்டரை வெளியிட்டு, படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.



தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான ‘ஜகமே தந்திரம்’ மற்றும் ‘மாறன்’ ஆகிய இரண்டு படங்களும் நேரடியாக ஓடிடி-யில் வெளியானதால் ‘நானே வருவேன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
நானே வருவேன்': புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு- Dinamani

Next Story
Share it